/

காமன்வெல்த்: வட்டு எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனைகள்!

காமன்வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள்.

News image
Updated On :12 ஏப்ரல் 2018, 11:55 am

எழில்

காமன்வெல்த் போட்டியில் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளார்கள்.

கடந்த 5-ம் தேதி முதல் காமன்வெல்த் போட்டிகள் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. 71 நாடுகளைச் சேர்ந்த 4500-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 226 பேர் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், துப்பாக்கி சுடுதல், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்ளிட்டவற்றில் தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனை புரிந்து வருகின்றனர்.

இன்று, வட்டு எறிதல் போட்டி நடந்தது. இதில் இந்திய வீராங்கனை சீமா புனியா 60.41 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான நவ்ஜீத் தில்லான், 57.43 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார். இதனால் இந்தப் போட்டியில் இந்திய அணிக்கு இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 68.26 மீட்டர் தூரம் எறிந்த ஆஸ்திரேலியாவின் டேனி ஸ்டீவன்ஸ் தங்கப் பதக்கம் பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.