காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் நேரில் பாராட்டு
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு திங்கள்கிழமை பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார்.


காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு திங்கள்கிழமை பிரதமர் மோடி நேரில் பாராட்டு தெரிவித்தார்.
கோல்ட்கோஸ்ட் நகரில் அண்மையில் 21-வது காமன்வெல்த் போட்டிகள் நடந்து முடிந்தது. இதில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றது.
இதற்கிடையே பதக்கம் வென்றவர்கள், பல்வேறு சம்மேளனங்களின் நிர்வாகிகள், அதிகாரிகளுக்கு பாராட்டு விழா பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:
பதக்கம் வென்றவர்களால் நாடு பெருமிதம் அடைகிறது. மேலும் விளையாட்டு வீரர்களால் ஒவ்வொரு குடிமகனும் உந்துதல் பெற்றுள்ளனர். பதக்கம் பெறாமல் கடுமையாக வெற்றிக்காக போராடியவர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள். யோகாசனம் செய்தாலே மன அழுத்தத்தை எதிர்கொள்ளலாம்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் மேரி கோம் தங்கம் வென்றுள்ளார். கோபிசந்த் வெற்றிகரமான வீரராக திகழ்ந்து, தற்போது வெற்றிகரமான பயிற்சியாளராக பல்வேறு வீரர்களை உருவாக்கி வருகிறார்.
கவனம், தீவிர உழைப்பு, பயிற்சி, திறமை போன்றவை வீரர்களுக்கு முக்கியம் என்றார் மோடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...