ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

ஓங்கி அடித்த சதம்: இங்கிலாந்து மண்ணில் கோலி நிகழ்த்திய சாதனைகள்!

கடந்தமுறை இங்கிலாந்து மண்ணில், 5 டெஸ்டுகளில் 134 ரன்கள் மட்டும் எடுத்த விராட் கோலி...

News image
Updated On :3 ஆகஸ்ட் 2018, 8:38 am

எழில்

கடந்தமுறை இங்கிலாந்து மண்ணில், 5 டெஸ்டுகளில் 134 ரன்கள் மட்டும் எடுத்த விராட் கோலி, இந்தமுறை ஒரே இன்னிங்ஸில் அதைத் தாண்டி தன் பலத்தை இங்கிலாந்து மண்ணிலும் நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

டி 20 தொடரை வென்ற நிலையில் இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்திடம் இழந்தது. இதன் தொடர்ச்சியாக 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஆட்டம் பர்மிங்ஹாம் எட்பாஸ்டனில் புதன்கிழமை தொடங்கியது. இங்கிலாந்தின் 1000-ஆவது டெஸ்ட்டான இதில் முதலில் ஆடிய அந்த அணி 89.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கேப்டன் ஜோ ரூட் 156 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 80 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 88 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 70 ரன்களையும், கியட்டன் ஜென்னிங்ஸ் 98 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 42 ரன்களையும் எடுத்தனர். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 62 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டையும், முகமது சமி 64 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சரிவாக அமைந்தது. முரளி விஜய், ஷிகர் தவன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 45 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 20 ரன்களுடன் முரளி விஜய்யும், 46 பந்துகளில் 26 ரன்களுடன் ஷிகர் தவனும், வெறும் 4 ரன்களில் லோகேஷ் ராகுலும், இங்கிலாந்து பந்துவீச்சாளர் சாம் கர்ரன் பந்துவீச்சில் வெளியேறினர். பின்னர் கேப்டன் கோலி களமிறங்கி அணியை சரிவில் இருந்து மீட்டார். கேப்டன் விராட் கோலி தனி ஆளாக நின்று அபாரமாக ஆடி 225 பந்துகளில் 22 பவுண்டரியுடன் 149 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 76 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 274 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி, 3.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்துள்ளது. 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் அந்த அணி, 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கோலியின் 22-வது டெஸ்ட் சதத்துக்கு முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் நிபுணர்களும் பலத்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்கள். இந்தச் சதத்தின் மூலம் விராட் கோலி நிகழ்த்திய சாதனைகள்:

இங்கிலாந்தில் விராட் கோலி

2014 - 134 ரன்கள், 288 பந்துகள், 10 இன்னிங்ஸில். (சராசரி - 13.40)
2018 - 149 ரன்கள், 225 பந்துகள், 1 இன்னிங்ஸ்

கோலி vs இங்கிலாந்துப் பந்துவீச்சாளர்கள்

 கோலி எதிர்கொண்ட   பந்துவீச்சாளர்கள் பந்துகள் ரன்கள்  ஸ்டிரைக்   ரேட் 
 ஆண்டர்சன் 74 18 24.32%
 ஸ்டூவர்ட் பிராட் 22 18 81.82%
 சாம் கரன் 39 35 89.74%
 அடில் ரஷித் 34 26 76.47%
 பென் ஸ்டோக்ஸ் 56 52 92.86%

 கோலி 149 ரன்கள்

முதல் 50 ரன்கள் - 100 பந்துகள்
மீதமுள்ள 99 ரன்கள் - 125 பந்துகள்

வீரர்களுடன் கோலியின் கூட்டணி

9,10, 11-வதாகக் களமிறங்கிய பேட்ஸ்மேன்களுடன் விளையாடியபோது கோலி 116 பந்துகளையும் அந்த மூன்று பேட்ஸ்மேன்களும் 37 பந்துகளை மட்டுமே சந்தித்தார்கள். 

தவன், ரஹானே, கார்த்திக் - 21 ரன்கள் (49 பந்துகள்)
பாண்டியா, அஸ்வின் - 36 ரன்கள் (60 பந்துகள்)
ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் - 92 ரன்கள் (116 ரன்கள்)

விராட் கோலி சதமெடுத்த நாடுகள்

ஆஸ்திரேலியா
இந்தியா
தென் ஆப்பிரிக்கா
நியூஸிலாந்து
இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள்
இங்கிலாந்து

(வங்கதேசத்தில் மட்டும் விராட் கோலி சதமெடுக்கவில்லை. அங்கு ஒரு டெஸ்ட் மட்டுமே விளையாடி, 14 ரன்கள் மட்டும் எடுத்தார்.)

குறைந்த இன்னிங்ஸில் 22 டெஸ்ட் சதங்கள் 

58 டான் பிராட்மேன்
101 சுனில் கவாஸ்கர்
108 ஸ்டீவ் ஸ்மித் 
113 விராட் கோலி 
114 சச்சின் டெண்டுல்கர் 

அதிக டெஸ்ட் சதங்கள் - கேப்டன்கள் 

25 கிரீம் ஸ்மித் 
19 ரிக்கி பாண்டிங் 
15 ஆலன் பார்டர் / ஸ்டீவ் வாஹ் / ஸ்டீவ் ஸ்மித் / விராட் கோலி

* ஆகஸ்ட் 2015-க்குப் பிறகு, சதமெடுத்த பிறகு முதல்முறையாக 150 ரன்னைத் தொடாமல் வெளியேறியுள்ளார் கோலி. (நடுவில் ஆட்டமிழக்காமல் 103, 104 ரன்களை எடுத்துள்ளார்.)

கோலியின் சமீபத்திய பெரிய சதங்கள், ஆகஸ்ட் 2015-க்குப் பிறகு

149 (நேற்றைய சதம்)
153
243
213
104*
103*
204
235
167
211
200
103 (ஆகஸ்ட் 2015)

90 ரன்களிலிருந்து ஆட்டமிழக்காமல் தொடர்ச்சியாக சதமெடுத்த இந்திய வீரர்கள்

17 விராட் கோலி (2014-2018)*
16 சுனில் கவாஸ்கர் (1978-1983)
14 அசாருதீன் (1984-1994)

அரை சதங்களைச் சதமாக மாற்றுவதில் அதிக  விகிதம்

69.04% பிராட்மேன்  (29 சதங்கள்/13 அரை சதங்கள்)
57.89% கோலி (22/16)
51.16% அசாருதீன் (22/21)
50.91% கிளார்க் (28/27)
50.85% ஹேடன் (30/29)

இங்கிலாந்தில் சதமெடுத்த இந்திய கேப்டன்கள் 

179 அசாருதீன், 1990
149 கோலி, 2018 
148 பட்டோடி, 1967
128 கங்குலி, 2002
121 அசாருதீன், 1990


* அணியின் மொத்த ரன்களில் அதிகச் சதவிகிதம் ரன்களை எடுத்த இந்திய கேப்டன்கள் (முழுமையாக முடிவடைந்த இன்னிங்ஸில்) 

55.41% தோனி (82/148) vs இங்கிலாந்து, ஓவல், 2014 
54.37% கோலி (149/274) vs இங்கிலாந்து, பர்மிங்ஹாம், 2018
49.84% கோலி (153/307) vs தென் ஆப்பிரிக்கா, செஞ்சுரியன்,  2018

2016 முதல், டெஸ்ட் போட்டியில்...

கோலி - 11 சதங்கள், 4 அரை சதங்கள்
ரூட் - 5 சதங்கள், 24 அரை சதங்கள்

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளில் சதமெடுத்த ஆசிய பேட்ஸ்மேன்கள்

சச்சின் டெண்டுல்கர்
ராகுல் டிராவிட்
யூனிஸ் கான்
விராட் கோலி

இவர்களில் இதை விரைவாகச் முடித்துள்ளார் கோலி. இச்சாதனையை கோலி 67-வது டெஸ்டிலும் டிராவிட் 73-வது டெஸ்டிலும் டெண்டுல்கர் 93-வது டெஸ்டிலும் யூனிஸ் 115 டெஸ்டிலும் நிகழ்த்தினார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.