நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

ஆசியப் போட்டியில் மீராபாய் சானு பங்கேற்பது சந்தேகம்?

உலக பளுதூக்கும் சாம்பியன் மீராபாய் சானு ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இந்திய தலைமைப் பயிற்சியாளர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2018, 12:34 pm IST


உலக பளுதூக்கும் சாம்பியன் மீராபாய் சானு ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என இந்திய தலைமைப் பயிற்சியாளர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
ஜாகர்த்தாவில் வரும் 18 முதல் செப். 2-ஆம் தேதி வரை ஆசியப் போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியா சார்பில் 541 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள பிரிவுகளில் பளுதூக்குதலும் ஒன்றாகும். கடந்த ஏப்ரல் மாதம் கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக தங்கப் பதக்கங்களை குவித்தனர்.
இதில் 48 கிலோ பிரிவில் மீராபாய் சானு உலக சாம்பியன் பட்டத்தையும், காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்றார். இந்நிலையில் ஆசியப் போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என பயிற்சியாளர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக மீராபாய் ஆசிய போட்டியில் இருந்து விலகும்படி கூறியுள்ளதாகவும் சர்மா தெரிவித்தார்.
கடந்த மே மாதம் முதல் முதுகுவலியால் மீராபாய் சானு அவதிப்பட்டு வருகிறார். மேலும் முழுமையான பளு தூக்கும் பயிற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக இந்திய பளுதூக்கும் சம்மேளனத்துக்கு அறிக்கையும் தந்துள்ளேன். அவர்கள் தான் இறுதி முடிவெடுக்க வேண்டும்.
ஆசிய போட்டிகளை விட ஒலிம்பிக் தகுதிச் சுற்று மிகவும் முக்கியமானது. உலக சாம்பியன் போட்டி வரும் நவம்பர் 1-ஆம் தேதி அஷ்காபாத்தில் தொடங்குகிறது. இது முதல் ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியாகும். மீராபாய் சானுவும் சம்மேளன நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது முதுகுவலிக்கான காரணத்தை நாடு முழுவதும் டாக்டர்களால் இதுவரை கண்டறிய முடியவில்லை. 
இப்பிரச்னை தொடர்பாக வியாழக்கிழமை முடிவெடுக்கப்படும் என சம்மேளன செயலர் சகதேவ் யாதவ் தெரிவித்தார்.
ஜாகர்த்தா ஆசியப் போட்டியில் பளுதூக்குதலில் கண்டிப்பாக தங்கம் வெல்லும் வாய்ப்புள்ள மீராபாய் சானு விலகினால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவைத் தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.