சச்சின், டிராவிட் போல இன்றைய இந்திய வீரர்கள் என்னிடம் ஆலோசனைகள் கேட்பதில்லை: கவாஸ்கர் கவலை!

சச்சின், டிராவிட், லட்சுமணன், சேவாக் போன்ற வீரர்கள் சுற்றுப்பயணங்களின்போது அடிக்கடி என்னிடம் பேசுவார்கள்... 
சச்சின், டிராவிட் போல இன்றைய இந்திய வீரர்கள் என்னிடம் ஆலோசனைகள் கேட்பதில்லை: கவாஸ்கர் கவலை!
Published on
Updated on
1 min read

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. 2-வது டெஸ்ட், லார்ட்ஸ் மைதானத்தில் வியாழன் அன்று தொடங்குகிறது.

இந்நிலையில் தனியாத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று சுனில் கவாஸ்கர் பேசியதாவது:

என்னிடம் தற்போது எந்த பேட்ஸ்மேனும் ஆலோசனைகள் கேட்பதில்லை. முன்பு சச்சின், டிராவிட், லட்சுமணன், சேவாக் போன்ற வீரர்கள் சுற்றுப்பயணங்களின்போது அடிக்கடி என்னிடம் பேசுவார்கள். ஆனால் இந்தத் தலைமுறை வீரர்கள் வித்தியாசமாக உள்ளார்கள் என நினைக்கிறேன். வெவ்வேறு விதமான பயிற்சியாளர்கள், பேட்டிங் பயிற்சியாளர்களை வைத்துள்ளார்கள். அவ்வப்போது, ரஹானே மட்டும் என்னிடம் ஆலோசனைக்காக வருவார்.

லார்ட்ஸ் டெஸ்டில் புஜாராவை சேர்க்க வேண்டும். அணிக்குக் கூடுதல் பேட்ஸ்மேன் தேவை. யாருடைய இடத்தை அவர் எடுத்துக்கொள்வார் என்பது ஆடுகளத்தைப் பொறுத்தது. வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இல்லாவிட்டால் உமேஷ் யாதவுக்குப் பதிலாக புஜாராவை அணியில் சேர்த்து பாண்டியாவைத் தக்கவைத்துக்கொள்வேன். லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி பெற இந்திய அணி டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.