கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

டொரண்டோ மாஸ்டர்ஸ்: நடால், ஜோகோவிச் முன்னேற்றம்

டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

பந்தை விரட்டும் ரபேல் நடால்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


டொரண்டோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் முதல்நிலை வீரர் நடால், ஜோகோவிச் ஆகியோர் நான்காம் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
கனடாவின் டொரண்டா நகரில் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. புதன்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரர் ரபேல் நடால் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பெனாயிட் பியரை வென்று மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றார். கடந்த 2005, 2008, 2013-இல் நடால் இங்கு பட்டம் வென்றிருந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்டேன் வாவ்ரிங்கா 1-6, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் மார்டன் புஸ்கோவிஸை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் வெரேவ் 6-4, 6-4 என பிராட்லியையும், 4 முறை சாம்பியன் ஜோகோவிச் 6-3, 6-4 என கனடா வீரர் பீட்டர் போலன்ஸையையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் ஜான் ஐஸ்நர் 7-6, 6-2 என பிரான்ஸின் ஹெர்பெர்டை வீழ்த்தினார். மூன்றாம் நிலை வீரர் டெல் பொட்ரோ காயம் காரணமாக வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.