சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையின் மகளிர் ஒற்றையரில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 11-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சர்வதேச பாட்மிண்டன் தரவரிசை பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மகளிர் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 1 இடம் சறுக்கி 11-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சீனாவில் நடைபெற்ற பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்றில் சாய்னா நேவால் தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணத்தால் தான் சாய்னா நேவால் பாட்மிண்டன் தரவரிசையில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து பாட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றதையடுத்து, தொடர்ந்து 3-ஆவது இடத்திலேயே நீடிக்கிறார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையின் முதலிரண்டு இடங்களில் முறையே சீன தைபே வீராங்கனை தை ட்ஸூ மற்றும் ஜப்பான் வீராங்கனை அகானே யமாகுச்சி உள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2 இடங்கள் சறுக்கி 8-ஆவது இடத்தில் உள்ளார். மற்றொரு இந்திய வீரர் ஹெஎச்.எஸ். பிரணாய் 11-ஆவது இடத்திலேயே நீடிக்கிறார். ஆடவர் இரட்டையர் தரவரிசையில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் செட்டி 2 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்தில் உள்ளனர். மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்திய ஜோடி ஏதும் டாப் - 20 இல் இடம்பெறவில்லை.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் என்.சிக்கி ரெட்டி 2 இடங்கள் பின்தங்கி 24-ஆவது இடத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு? இன்றைய நிலவரம் (ஆக. 17)

விசிகவின் ‘தமிழ் தேசிய எழுச்சி மாநாடு: முதல்வர் விஜய் வாழ்த்து!

தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து





