சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

துளிகள்....

துளிகள்....

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


இந்திய கால்பந்து லீக் (ஐஎஸ்எல்) சீசன் 2018-19-இக்கு அணியை பலப்படுத்தும் வகையில் தில்லி டைனமோஸ் அணி ஸ்பெயின் மிட்பீல்டர் மார்கோஸ் டெபரை ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 32 வயதான டெபருக்கு எஃப் சி புணே அணியில் ஒப்பந்தம் முடிந்தததால், அவர் தில்லி டைனமோஸ் அணியில் ஒப்பந்தமாகியுள்ளார். பிரபல வீரர்கள் பேபர்கேஸ், டேவிட் சில்வா போன்றவர்களுடன் விளையாடியவர் டெபர்.


ஐஎஸ்எல் லீக் அணிகளில் ஒன்றான எஃப் சி புணே தனது தலைமை பயிற்சியாளராக மிகுயேல் ஏஞ்சல் போர்சுகலை நியமித்துள்ளது. ஸ்பெயினின் இரண்டாம் டிவிஷன் கிளப்பான கிரனடாவுக்கு பயிற்சியாளராக மிகுயேல் ஏஞ்சல் இருந்துள்ளார். மேலும் கடந்த 2017-18 சீசனில் தில்லி டைனமோஸ் பயிற்சியாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.


ஐசிசி தடைக்கு பின் டி 20 ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இலங்கை அணியில் மீண்டும் இணைந்துள்ளார் கேப்டன் தினேஷ் சண்டிமால்.


பந்து சேதப்படுத்திய புகார் எதிரொலியாகவும், மைதானத்துக்கு விளையாடுவதற்காக 2 மணி நேரத்துக்கு மேலாக வர மறுத்ததற்காகவும் ஐசிசி சார்பில் 2 டெஸ்ட், 4 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாட சண்டிமாலுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தடை நீங்கியதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 ஆட்டத்தில் பங்கேற்கிறார் அவர்.

உலக யூத் தடகள 400 மீ சாம்பியன் ஹிமா தாஸ் தனியார் விளையாட்டு மேலாண்மை நிறுவனத்துடன் பல கோடி மதிப்புள்ள இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.