/

வடேகர் மறைவு: நினைவலைகள் புகைப்படங்களாக!

இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1971-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக...

News image
Updated On :16 ஆகஸ்ட் 2018, 5:39 am

எழில்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் அஜித் வடேகர் (77), உடல்நலக் குறைவால் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் புதன்கிழமை காலமானார்.

கடந்த 1958-59 காலகட்டத்தில் முதல்தர கிரிக்கெட்டில் தடம் பதித்த அஜித் வடேகர், சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் 1966-67 காலகட்டத்தில் இடம்பிடித்தார். 1966-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் களம் புகுந்தார். இந்தியாவுக்காக 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வடேகர், 2,113 ரன்கள் எடுத்துள்ளார். 2 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி, 73 ரன்கள் எடுத்தார்.

இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1971-ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.