தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

நான்காவது டெஸ்ட்: இங்கிலாந்து திணறல் 246

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

செளதாம்ப்டன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
 நான்காவது டெஸ்டில் வென்றால் தான் சமநிலை ஏற்பட்டு இந்தியா தொடரை கைப்பற்ற வாய்ப்பு கிட்டும். அதே நேரத்தில் இங்கிலாந்து இதில் வென்றால் 3-1 என தொடரைக் கைப்பற்றி விடும். இதனால் பரபரப்பு நிறைந்த நான்காம் டெஸ்ட் வியாழக்கிழமை ரோஸ்பெளல் மைதானத்தில் தொடங்கியது.
இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக சாம் கரன் மீண்டும் சேர்க்கப்பட்டார்.  மொயின் அலி சேர்க்கப்பட்டிருந்தார்.
தொடக்கமே சரிவு: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அலிஸ்டர் குக், கியட்டன் ஜென்னிங்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் துவக்கத்திலேயே இங்கிலாந்து அதிர்ச்சியை சந்தித்தது. குக் 17 ரன்களுக்கும், ஜென்னிங்ஸ் ரன் ஏதுமின்றியும் வெளியேறினர். கேப்டன் ஜோ ரூட் 4, ஜானி பேர்ஸ்டோவ் 6 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இணை நிதானமாக ரன்களை சேகரித்த நிலையில் முகமது சமி பந்துவீச்சில் ஸ்டோக்ஸ் 23, பட்லர் 21 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் சாம் கரன்-மொயின் அலி இணை சேர்ந்து ரன்களை சேர்த்தனர். இருவரும் 75 ரன்களை சேர்த்த நிலையில் மொயின் அலி 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.  அடில் ரஷீத் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
பும்ரா அசத்தல் 3-46: அபாரமாக ஆடிய சாம் கரன் 1 சிக்ஸர், 8 பவுண்டரியுடன் 136 பந்துகளில் 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஸ்டுவர்ட் பிராட் 17 ரன்களுக்கு வெளியேறினார். இறுதியில் முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 246 ரன்களையே எடுத்தது. இந்திய தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா 3-46, இஷாந்த் 2-26, சமி 2-51, அஸ்வின் 2-40, பாண்டியா 1-51 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தியா 19: பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்ட நேர முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. தவன் 3, லோகேஷ் ராகுல் 11 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருந்தனர். இங்கிலாந்தைக் காட்டிலும் 227 ரன்கள் பின்தங்கி உள்ளது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.