காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

ரஞ்சி: 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது தமிழக அணி!

கடைசி 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்ததால் 92 ரன்களுடன் ஷாருக் கானால் சதமடிக்கமுடியாமல் போனது... 

News image
Updated On :7 டிசம்பர் 2018, 6:45 am

எழில்

கேரளாவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தமிழகம் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல்நாள் முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தது தமிழ்நாடு. ஷாருக் கான் 82, முகமது 25 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று தொடங்கிய ஆட்டத்தில் தமிழக அணி 98 ஓவர்களில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 4 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்ததால் 92 ரன்களுடன் ஷாருக் கானால் சதமடிக்கமுடியாமல் போனது. கேரளாவின் வாரியர் 5 விக்கெட்டுகளையும் பசில் தம்பி 4 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். பிறகு தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த கேரள அணி, 2-ம் நாள் மதிய உணவு இடைவேளையின்போது 22 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.