இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் இந்த தொடரில் தற்போது வரை அவர் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக இரு அரிய சாதனைகளையும் படைத்தார். அதன் விவரம் பின்வருமாறு:
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்:
- ஜேம்ஸ் ஆண்டர்சன் - 110 விக்கெட்டுகள்
- முத்தையா முரளிதரன் - 105 விக்கெட்டுகள்
- இம்ரான் கான் - 94 விக்கெட்டுகள்
- நாதன் லயன் - 77 விக்கெட்டுகள்
- மால்கம் மார்ஷல் - 76 விக்கெட்டுகள்
- ஸ்டூவர்ட் பிராட் - 70 விக்கெட்டுகள்
டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியவர்கள்:
- முத்தையா முரளிதரன், நாதன் லயன் - 7 முறை
- இம்ரான் கான், இயன் போத்தம், மால்கம் மார்ஷல் - 6 முறை
- ரிச்சி பெனாட், டேல் ஸ்டெயின் - 5 முறை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


