வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :18 டிசம்பர் 2018, 1:00 pm

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2-ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், 3 மற்றும் 4-ஆவது டெஸ்ட் போட்டிகளுக்கான 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக அவதிப்பட்ட துவக்க வீரர் ஆரோன் பிஞ்ச் முழு உடல் தகுதி பெற்றதால் அந்த அணியில் எந்த மாற்றமும் இன்றி அறிவிக்கப்பட்டது. 

ஆஸ்திரேலிய அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:

டிம் பெய்ன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜாஷ் ஹாசில்வுட் (துணைக் கேப்டன்), மிட்செல் மார்ஷ் (துணைக் கேப்டன்), பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், ஷான் மார்ஷ், பீட்டர் ஸிடில், மிட்செல் ஸ்டார்க். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.