‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

ஆசிய கோப்பை கால்பந்து 2019: கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை

வரும் 2019 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image

புதிய சீருடை அறிமுக விழாவில் பங்கேற்ற கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் வீரர்கள்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST


வரும் 2019 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பாக ஆடுவோம் என இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு நாடுகளில் வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இப்போட்டி நடைபெறுகிறது. இதில் ஆசியக் கண்டத்தைச்சேர்ந்த 24 அணிகள் பங்கேற்கின்றன. கடந்த 2011-க்கு பின் இந்தியா தற்போது தான் மீண்டும் தகுதி பெற்றுள்ளது. 17 முறை நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா 4 முறை மட்டுமே பங்கேற்றுள்ளது.
இதில் பங்கேற்க உள்ள இந்திய அணிக்கு புதிய விளையாட்டு சீருடை அறிமுக விழா புதன்கிழமை புது தில்லியில் நடைபெற்றது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச் செயலாளர் குஷால் தாஸ், பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன், கேப்டன் சுனில் சேத்ரி மற்றும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
வியாழக்கிழமை இந்திய அணி ஐக்கிய அரபு நாடுகளுக்கு புறப்பட்டுச் செல்கிறது. இரண்டு வாரங்கள் அங்கு தங்கி பயிற்சியில் ஈடுபடுகிறது.
இதன் ஒருபகுதியாக 27-ஆம் தேதி ஓமனுடன் நட்பு ஆட்டத்திலும் மோதுகிறது.
இதுதொடர்பாக கேப்டன் சுனில் சேத்ரி கூறியதாவது:
எந்த அணியையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். எங்கள் பிரிவில் உள்ள 3 அணிகளுமே சவாலானவை தான். எனினும் நாங்கள் சிறப்பாக தயாராகியுள்ளோம். தாய்லாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வென்று 3 புள்ளிகளையும் பெற வேண்டும் என்பதே முதல் நோக்கம். கடந்த 2011-இல் இந்திய அணியினர் மாதங்கள் தான் ஒருங்கிணைந்திருந்தனர்.
ஆனால் தற்போது ஐஎஸ்எல், ஐ-லீக் போட்டிகள் என தொடர்ந்து ஒன்றாக ஆடி வருகின்றனர். ஓரே அணியாக செயல்பட்டு வெற்றியை ஈட்ட முயற்சிப்போம் என்றார் சேத்ரி.
வரும் 26-ஆம் தேதி போட்டிக்கான 23 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.