உலகின் இளம் செஸ் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைத் தவறவிட்ட சென்னைச் சிறுவன்!
செர்ஜி கர்ஜாகினின் சாதனையை முறியடிக்க இரு சென்னை செஸ் வீரர்கள் முயன்றும் முடியாமல் போய்விட்டது...


செர்ஜி கர்ஜாகினின் சாதனையை முறியடிக்க இரு சென்னை செஸ் வீரர்கள் முயன்றும் முடியாமல் போய்விட்டது.
2002-ல், உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின், 12 வயதில் (12 வருடம் 7 மாதங்களில்) செஸ் கிராண்ட் மாஸ்டராகி, இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற சாதனையைச் செய்தார். இன்றுவரை அவர் சாதனையை யாராலும் தாண்ட முடியவில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வயது பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைத் தகர்க்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியாமல் போனது. 12 வயது 10 மாதம், 13 நாள்களில் கிராண்ட் மாஸ்டர் ஆனார். எனினும் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றார். பிரக்ஞானந்தாவால் முடியாமல் போனாலும் கர்ஜாகின்னின் சாதனையை முறியடிக்க சென்னையிலிருந்து இன்னொரு இளம் வீரர் முயற்சி செய்தார்.
செர்பியாவில் நடைபெற்ற செஸ் போட்டியொன்றை வென்ற 12 வயது சென்னை வீரர் குகேஷ், கிராண்ட்மாஸ்டர் பட்டத்துக்குரிய 2-வது தகுதியை அடைந்தார். இறுதி கிராண்ட் மாஸ்டர் தகுதியை அடைந்து சாதனை செய்ய அவருக்கு இன்று வரை (டிசம்பர் 29) அவகாசம் இருந்தது. இதையடுத்து உலக சாதனையைப் படைக்கும் முயற்சியில் களமிறங்கினார் குகேஷ்.
டிசம்பர் 13 முதல் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற சன்வே சிட்கெஸ் செஸ் ஃபெஸ்டிவல் போட்டியில் குகேஷ் கலந்துகொண்டார். இதில் சிறப்பாக விளையாடி அதிகப் புள்ளிகள் பெறுவதன் மூலம் உலகின் இளம் கிராண்ட் மாஸ்டர் என்கிற தகுதியை குகேஷால் அடையமுடியும் என்கிற அற்புதமான நிலை இருந்தது. இதையடுத்து, கர்ஜாகின்-னின் 16 வருடச் சாதனையை சென்னைச் சிறுவன் முறியடிக்க வாய்ப்புண்டா என்கிற எதிர்பார்ப்பு செஸ் ஆர்வலர்களிடையே எழுந்தது.
ஆனால் 10 சுற்றுகளில் 6.5 புள்ளிகள் மட்டுமே பெற்று வாய்ப்பை இழந்துள்ளார் குகேஷ். எனினும் இந்த இளம் வயதில் 2500 புள்ளிகள் பெற்று கவனம் ஈர்த்துள்ளார். சன்வே சிட்கெஸ் செஸ் ஃபெஸ்டிவலில் குகேஷுக்கு 24-வது இடமே கிடைத்தது. இந்தமுறை தோல்வியடைந்தாலும் விரைவில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை குகேஷ் அடையவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...