ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

டூபிளெஸிஸ் சதம்: இந்தியாவுக்கு 270 ரன்கள் வெற்றி இலக்கு

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 269 ரன்கள் எடுத்தது. கேப்டன் டூபிளெஸிஸ் சதமடித்தார். 

News image
Updated On :1 பிப்ரவரி 2018, 2:52 pm

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா தொடரை வென்றது. இருப்பினும் கடைசி போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. 

இதையடுத்து 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்நிலையில், டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளெஸிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக கேப்டன் டூபிளெஸிஸ் 120 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். மோரிஸ் 37, டிகாக் 34, ஃபெலுக்வாயோ 27 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3, சாஹல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.