வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

இந்திய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து

இந்திய ஓபன் பாட்மிண்டன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் வெற்றி பெற்று தகுதி பெற்றார் பி.வி.சிந்து. 

News image
Updated On :2 பிப்ரவரி 2018, 2:13 pm

Raghavendran

இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டி தில்லியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. இவற்றில் இந்தியவைச் சேர்ந்த சிந்து மற்றும் சாய்னா ஆகியோர் போட்டியிட்டனர்.

இதன் முதலாவது காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பியாட்ரிஸ் கொர்ரலேஸுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில், 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் தாய்லாந்து வீராங்கனை ராச்நாக் இந்தானோனை அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறார் சிந்து.

இதையடுத்து நடைபெறும் 2-ஆவது காலிறுதிப் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த மற்றொரு முன்னணி வீராங்கனை சாய்னா நேவால், அமெரிக்காவின் பீய்வின் சாங்கை எதிர்கொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.