ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

இனிமையான நினைவுகள் தொடரும்: ஜூனியர் உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு டிராவிட் பேட்டி

உலகக் கோப்பையை வெற்றியை அனுபவிக்காத டிராவிட், பயிற்சியாளராகத் தன்னுடைய முதல் உலகக் கோப்பை வெற்றியை...

News image
Updated On :3 பிப்ரவரி 2018, 9:37 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜூனியர் உலகக் கோப்பை போட்டியின் இறுதிச்சுற்றை இந்திய அணி வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. 

பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இரு அணிகளுமே தலா 3 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், 4-ஆவது முறையாக வாகை சூட இரு அணிகளுமே கடுமையாகப் போட்டியிட்டன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. மெர்லோ அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் இஷான் போரெல், ஷிவா சிங், நாகர்கோடி, அனுகுல் ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சுலபமாக எதிர்கொண்ட இந்திய அணி, 38.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 220 ரன்களில் இலக்கை எட்டி கோப்பையைக் கைப்பற்றியது. மன்ஜோத் கல்ரா 101, தேசாய் 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

திராவிட் பயிற்சியின் கீழான இந்திய அணி இப்போட்டியில் ஒரு தோல்வியையும் சந்திக்காமல் கடைசிவரை வெற்றியை மட்டுமே சந்தித்துள்ளது. ஜூனியர் உலகக் கோப்பையை நான்காவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து இந்திய அணி வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பிசிசிஐ பரிசுத்தொகை அறிவித்துள்ளது. தலைமைப் பயிற்சியாளரான டிராவிடுக்கு ரூ. 50 லட்சமும் அணி வீரர்களுக்கு ரூ. 30 லட்சமும் இதர பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு ரூ. 20 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐயின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு வரை உலகக் கோப்பையை வெற்றியை அனுபவிக்காத டிராவிட், பயிற்சியாளராகத் தன்னுடைய முதல் உலகக் கோப்பை வெற்றியைக் கண்டுள்ளார். ஆட்டம் முடிந்தவடைந்தபிறகு அவர் கூறியதாவது:

Story image

இளைஞர்கள் கடும் முயற்சி செய்து கோப்பையை வென்றிருப்பது குறித்து பெருமைப்படுகிறேன். இந்த நினைவுகள் என்றென்றும் மறக்கமுடியாதவை. ஆனால் வீரர்களுக்கு இதுவே இனிமையான கடைசி நினைவுகளாக இருக்காது. அவர்கள் வாழ்க்கையில் இதுபோன்ற பல பெருமையான தருணங்களைச் சந்திக்கவுள்ளார்கள். இதர பயிற்சியாளர்களும் அணி நிர்வாகிகளும் நிறைய ஒத்துழைப்பு அளித்துள்ளார்கள். இந்த இளம் வீரர்களுக்குத் தேவையானதை வழங்கினோம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.