மகளிர் கிரிக்கெட்: இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
மகளிர் கிரிக்கெட்: இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
Updated on
1 min read

மகளிர் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றான இந்த ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் கிம்பர்லி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 43.2 ஓவர்களில் 125 ரன்களுக்கு வீழ்ந்தது.

டாஸ் வென்று பேட் செய்த இந்தியாவில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 84 ரன்கள் விளாசினார். கேப்டன் மிதாலி ராஜ் அரைசத வாய்ப்பை இழந்து 45 ரன்களில் வெளியேறினார். பூனம் ராவத் 19, ஹர்மன்பிரீத் கெளர் 16, சுஷ்மா வர்மா 15 ரன்கள் எடுக்க, வேதா கிருஷ்ணமூர்த்தி, தீப்தி சர்மா ஆகியோர் ஒற்றை இலக்க ரன்னில் நடையைக் கட்டினர்.

இறுதியாக ஷிக்ஷா பாண்டே 9, ஜுலன் கோஸ்வாமி 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் மாரிஸானே காப் 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

பின்னர் ஆடிய அந்த அணியில் கேப்டன் டேன் வான் நீகிர்க் மட்டும் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 125 ரன்களுக்கு சுருண்டது தென் ஆப்பிரிக்கா. இந்திய தரப்பில் ஜுலன் கோஸ்வாமி அதிகபட்சமாக 4, ஷிக்ஷா பாண்டே 3, பூனம் யாதவ் 2, ராஜேஷ்வரி கெய்க்வாட் ஒரு விக்கெட் எடுத்தனர். ஸ்மிருதி மந்தனா ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com