சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் டக் பொலிஞ்சர் ஓய்வு!
ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டக் பொலிஞ்சர் (36) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார்.


ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் டக் பொலிஞ்சர் (36) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011-ம் ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வெல்ல பொலிஞ்சர் முக்கிய காரணமாக இருந்தவர்.
2009 முதல் 2010 வரை ஆஸ்திரேலிய அணிக்காக 12 டெஸ்டுகளில் விளையாடிய பொலிஞ்சர், 50 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 39 ஆட்டங்களில் விளையாடி 62 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல 9 டி20 ஆட்டங்களில் இவர் எடுத்த விக்கெட்டுகளின் எண்ணிக்கை - 9. உள்ளூர் கிரிக்கெட்டில் நியூ சவுத்வேல்ஸ் அணிக்காக விளையாடி 290 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்குச் செல்லவுள்ளேன். இனி குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கவேண்டும் என்று பொலிஞ்சர் ஓய்வு அறிவிப்பு குறித்து கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை வென்றது. அந்த அந்த இரண்டு வருடங்களிலும் சென்னை அணியில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்துவீச்சாளர் - டக் பொலிஞ்சர். 2010-ல், 8 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 12 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்த வருடம் பொலிஞ்சர் 13 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால் 2012-ல் ஏமாற்றமளித்தார். 6 ஆட்டங்களில் மட்டுமே விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்தார். இதற்குப் பிறகு அவர் ஐபிஎல்-லில் பங்கேற்கவில்லை. இன்றுவரை ஐபிஎல்-லில் பந்துவீச்சாளர்களில் அதிக ஆவ்ரேஜ் உள்ளவர் பொலிஞ்சர் தான். 27 ஆட்டங்களில் 693 ரன்கள் கொடுத்து 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சென்னை ரசிகர்களால் பொலிஞ்சரை மறக்கமுடியாது.

© IPL
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...