பலவீனமாகும் தென் ஆப்பிரிக்கா: காயத்தால் டி காக்கும் விலகல்
தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குவின்டன் டி காக் காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.


தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான குவின்டன் டி காக் காயம் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணியில் முதலில், டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி வில்லியர்ஸ் முதல் 3 ஒருநாள் ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அடுத்து, முதல் ஒருநாள் ஆட்டத்தில் காயம் கண்ட கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ், ஒருநாள் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் இருந்து விலகினார்.
இந்நிலையில், செஞ்சுரியனில் நடைபெற்ற 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் டி காக் பேட்டிங் செய்தபோது அவரது இடதுகை மணிக்கட்டுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து அவர் முழுமையாக மீள 2 முதல் 4 வாரங்கள் தேவைப்படும் என்றும், எனவே, எஞ்சிய 4 ஒருநாள் ஆட்டங்கள், மற்றும் டி20 தொடரில் இருந்து அவர் விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி காக்கிற்கு பதிலாக மாற்று வீரரை தென் ஆப்பிரிக்கா நியமிக்கவில்லை. முன்னதாக, டூ பிளெஸ்ஸிஸ் விலகலுக்குப் பிறகு விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக ஹென்ரிச் கிளேசன் அணியில் இணைந்திருந்தார். எனவே, கேப் டவுனில் நடைபெறும் 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் முதல் முறையாக களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் தொடரின் முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...