தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பியோங்சாங் ஒலிம்பிக்குடன் ஓய்வு

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய லூக் விளையாட்டு வீரர் ஷிவா கேசவன் (36) கூறினார்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 7:36 pm

DIN

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற இருக்கும் குளிர்கால ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய லூக் விளையாட்டு வீரர் ஷிவா கேசவன் (36) கூறினார்.
கடந்த 1998 முதல் குளிர்கால ஒலிம்பிக்கில் இந்தியாவின் தவிர்க்க முடியாத போட்டியாளரான ஷிவாவுக்கு, இது 6-ஆவது ஒலிம்பிக் போட்டியாகும். லூக் போட்டியில் நடப்பு ஆசிய சாம்பியனான அவர், 2011, 2012, 2016, 2017 போட்டிகளிலும் சாம்பியன் ஆகியுள்ளார். ஹிமாசல பிரதேசம் மனாலியைச் சேர்ந்த ஷிவா, ஆசிய லூக் போட்டியின் நடப்பு சாதனையாளர் ஆவார்.
2006 குளிர்கால ஒலிம்பிக்கில் 25-ஆவதாக வந்ததே இவரது அதிகபட்சமாகும். முதல் முறையாக எதிர்வரும் ஒலிம்பிக்கிற்கு தனக்கென பிரத்யேக பயிற்சியாளருடன் பங்கேற்கிறார் ஷிவா. அத்துடன், அரசு தரப்பில் இருந்தும் அவருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ஷிவா கூறியதாவது: இந்தியாவுக்காக 22 ஆண்டுகள் போட்டியிட்டுள்ளேன். தற்போது வேறு சில விஷயங்களில் கவனம் செலுத்தலாம் என நினைக்கிறேன். எனவே, பியோங்சாங் ஒலிம்பிக் எனது கடைசி சர்வதேச போட்டியாகும். அதில் சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்.
சமீபத்தில் ஜெர்மனியில் நடைபெற்ற ஒரு போட்டியின்போது விபத்தில் சிக்கினேன். இன்னும் அதிலிருந்து முழுவதுமாக மீளவில்லை. எனது போட்டி நடைபெறும் 10, 11 தேதிகளுக்குள்ளாக 100 சதவீதம் மீண்டிடுவேன் என நம்புகிறேன்.
ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க மற்றும் நிறைவு நிகழ்ச்சிகளின்போது இந்தியக் கொடியை ஏந்திச் செல்லும் கெளரவம் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. அது ஓர் அற்புதமான உணர்வு. கோடைகால ஒலிம்பிக்கைப் போன்றே, குளிர்கால ஒலிம்பிக்கிலும் அதிக இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்று ஷிவா கேசவன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.