ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குள் நான் செல்லவில்லை: டிராவிட் விளக்கம்

இந்தப் போட்டியில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். எனவே நான் அவருக்கு என் வாழ்த்துகளைக் கூறினேன்...

News image
Updated On :6 பிப்ரவரி 2018, 10:33 am

எழில்

பாகிஸ்தான் அணியின் ஓய்வறைக்குள் தான் செல்லவில்லை என இந்திய யு-19 அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நிறைவடைந்த யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. மேலும், 4 முறை சாம்பியன் ஆன ஒரே அணி என்ற பெருமையும் பெற்றது.

அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானைத் தோற்கடித்தது. அப்போது பாகிஸ்தானின் மேலாளர் நதீம் கான் கூறியதாவது: மோசமான தோல்விக்குப் பிறகு எங்கள் ஓய்வறைக்கு வந்தார் டிராவிட். இது எங்களுடைய மனநிலையை உற்சாகப்படுத்தியது. அவருடைய பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக இச்சம்பவம் இருந்தது என்றார்.

ஆனால் தான் பாகிஸ்தானின் ஓய்வறைக்குச் செல்லவில்லை என்று டிராவிட் நேற்று விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் அவர்களுடைய ஓய்வறைக்குச் செல்லவில்லை. அவர்களிடம் மிகச்சிறந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் உள்ளார். இந்தப் போட்டியில் அவர் மிகச்சிறப்பாக விளையாடினார். எனவே நான் அவருக்கு என் வாழ்த்துகளைக் கூறினேன். ஓய்வறையின் வெளியே தான் அவரைச் சந்தித்தேன். நன்றாக விளையாடியுள்ளாய். ஒரு பயிற்சியாளராகப் புதிய திறமையைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று அவரிடம் சொன்னேன் பாகிஸ்தான் பயிற்சியாளர்களும் இந்திய வீரர்கள் குறித்து பாராட்டியுள்ளார்கள். இந்திய வீரர்களின் திறமை மற்ற அணிகளுக்குப் பாடமாக உள்ளதாகக் கூறினார்கள். மிகவும் தாராளமாக அவர்களுடைய பாராட்டுகளை வெளிப்படுத்தினார்கள். எனவே நானும் அவர்கள் அணியில் நல்ல திறமைகள் உள்ளதாகக் கூறினேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.