ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீன தைபேவின் டா ஸு யிங்கை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான சிந்து, தாய்லாந்தின் பான்பவீ சோசுவாங்கை எதிர்கொள்கிறார்.
உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபனில் டாய் ஸுவிடம் கண்ட தோல்விக்கு இந்த ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது.
சிந்து தனது முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் நிலையில், தனது 2-ஆவது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்திய ஓபன் பாட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் சிந்து, பெய்வென்னிடம் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் பிரைஸ் லெவெர்டெஸை எதிர்கொள்கிறார்.
போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த், கடந்த ஆண்டு 4 பட்டங்களை வென்றது நினைவுகூரத்தக்கது.
மற்றொரு இந்தியரான சாய் பிரணீத், உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார். உலகின் 11-ஆம் நிலை வீரரான பிரணாய், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் டோவ் டியென் சென்னுடன் முதல்சுற்றில் மோதுகிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் சிரக் ஷெட்டி-சாத்விக்சாய்ராஜ் ஜோடி, ஜப்பானின் டகுரோ ஹோகி-யுகோ கொபாயாஷி இணையை எதிர்கொள்கிறது. மானு அத்ரி-சுமீத் ரெட்டி இணை, இங்கிலாந்தின் மார்கஸ் எலிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் ஜோடியை சந்திக்கிறது.
மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை, போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் மிசாகி மட்சுமோடோ-அயாகா டகாஹாஷி இணையுடன் மோதுகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி, ஜெர்மனியின் மார்வின் எமில் செய்டெல்-லின்டா எஃப்லர் இணையை எதிர்கொள்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதிய கட்சி தொடங்கினார் புகழேந்தி!

கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு! - ஈரான் அரசு அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு!

அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000-ஐ கடந்த உயிர்ப் பலி!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

