ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மகளிர் டி20: இந்தியா பேட்டிங்!

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-ஆவது டி20 ஆட்டம் கேப் டவுனில் இன்று தொடங்கியது...

News image
Updated On :24 பிப்ரவரி 2018, 12:00 pm

எழில்

மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 5-ஆவது டி20 ஆட்டம் கேப் டவுனில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்பிரிக்க-இந்திய மகளிர் அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற 4-ஆவது டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. மித்தாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் 3 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி வென்றது. அதைத் தொடர்ந்து, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் தற்போது இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் விளையாடி வருகின்றன. கடந்த 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. டி20 கேப்டனான ஹர்மன்பிரீத் கௌர் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் இத்தொடரைக் கைப்பற்ற முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.