155 நாள்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்காக விளையாடவுள்ள பென் ஸ்டோக்ஸ்!
கடந்த செப்டம்பர் 25 அன்று இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த தகராறில் தொடர்பு இருப்பதாக ஸ்டோக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது...


கடந்த செப்டம்பர் 25 அன்று இரவு விடுதி ஒன்றில் நிகழ்ந்த தகராறில் தொடர்பு இருப்பதாக ஸ்டோக்ஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தால் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டோலில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அங்குள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் அதிகாலையில் வெற்றியைக் கொண்டாடியபோது, பென் ஸ்டோக்ஸுக்கும், அங்கு வந்த 27 வயது இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் அவரைத் தாக்கியுள்ளார். அதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பென் ஸ்டோக்ஸைக் கைது செய்தார்கள். எனினும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து இங்கிலாந்தின் ஆஷஸ் அணியிலிருந்து ஸ்டோக்ஸ் நீக்கப்பட்டார்.
தெருச்சண்டையில் ஈடுபட்டு அமைதியைக் குலைத்ததாக பென் ஸ்டோக்ஸ் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பென் ஸ்டோக்ஸ், ரையான் அலி, ரையான் என மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகச் சமீபத்தில் பிரிஸ்டோல் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார் ஸ்டோக்ஸ். இதனையடுத்து நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில் ஹாமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியில் கலந்துகொள்ளவுள்ளார் பென் ஸ்டோக்ஸ். அவர் 155 நாள்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்காக சர்வதேசப் போட்டியில் பங்கேற்கவுள்ளார். முழுவதுமாக பத்து ஓவர்கள் வீசமுடியாமல் போனாலும் பேட்ஸ்மேனாக ஸ்டோக்ஸ் அணிக்குத் தேர்வாக வாய்ப்புண்டு என இங்கிலாந்து கேப்டன் மார்கன் பேட்டியளித்துள்ளார்.
5 ஒருநாள் போட்டிகளிலும் இரு டெஸ்டுகளிலும் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...