ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இலங்கை  முத்தரப்பு டி20 தொடர்; இந்திய அணி அறிவிப்பு: கோலி, தோனிக்கு ஓய்வு! 

இலங்கையில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு டி20  தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:20 pm

DIN

மும்பை: இலங்கையில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள முத்தரப்பு டி20  தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மார்ச் 6-ம் தேதி முதல் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை தவிர மூன்றாவதாக எந்த நாடு பங்கேறது என்ற விபரம் தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் முத்தரப்பு டி20  தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்கத் தொடரில் ஓய்வின்றி கடுமையாக விளையாடி  இருந்த கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மற்றும் , எம்.எஸ்.தோனி, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்தியa அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியை அறிவித்த பின்னர் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

சமீபத்தில் உள்நாட்டில் நடந்த சயீத் முஷ்டாக் அலி டி 20 தொடர் மற்றும் ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த், ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

'ஆல் ரவுண்டர்' பாண்ட்யாவுக்கு மாற்றாக தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கும் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் ரன்களைக் குவித்த மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழுமையான அணி வீரர்கள் விவரம்:

ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், ரிஷ்பா பந்த்(விக்கெட் கீப்பர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.