விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

ஐபிஎல்-லில் டிஆர்எஸ் முறை: இந்த வருடம் முதல் அமல்படுத்த பிசிசிஐ முடிவு!

ஏற்கெனவே சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்தி வருவதால் ஐபிஎல்-லில் நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது...

News image
Updated On :28 பிப்ரவரி 2018, 10:02 am

எழில்

இந்த வருட ஐபிஎல்-லில் டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்த பிசிசிஐயும் ஐபிஎல் அமைப்பும் முடிவு செய்துள்ளன.

ஐபிஎல் போட்டியில் டிஆர்எஸ் முறையைக் கொண்டுவர நீண்டநாளாக ஆவலாக இருந்தது பிசிசிஐ. இந்த வருடம் முதல் டிஆர்எஸ் முறையை அமல்படுத்த முடிவு எடுத்துள்ளது. ஐபிஎல்-லில் எல்லா தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும்போது இதை மட்டும் ஏன் விட்டுவைக்க வேண்டும் என்று இந்தமுறை அமல்படுத்தவுள்ளது. ஏற்கெனவே சர்வதேசப் போட்டிகளில் பயன்படுத்தி வருவதால் ஐபிஎல்-லில் நடைமுறைப்படுத்துவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என்று பிசிசிஐ உறுப்பினர் கூறியுள்ளார்.

Story image

கடந்த டிசம்பரில் 10 இந்திய நடுவர்களுக்கு டிஆர்எஸ் குறித்த பயிற்சி வகுப்புகளை நடத்தியுள்ளது பிசிசிஐ. ஐசிசி நடுவர் பயிற்சியாளர் டெனிஸ் பர்ன்ஸ், ஆஸ்திரேலிய நடுவர் பால் ரீஃபில் இந்தியாவுக்கு வந்து இந்தப் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்கள். அந்த 10 இந்திய நடுவர்களும் ஐபிஎல்-லில் பணியாற்றவுள்ளார்கள். 

இதையடுத்து டி20 லீக்குகளில் பாகிஸ்தான் சூப்பர் லீக்குக்கு அடுத்ததாக ஐபிஎல்-லில் டிஆர்எஸ் முறை பயன்படுத்தப்படவுள்ளது.

11-வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி, வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.