மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

2-வது அதிவேக ஆறாயிரம் டெஸ்ட் ரன்கள்: ஸ்மித்தின் புதிய சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக ஆறாயிரம் டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சோபர்ஸுடன் இணைந்து 2-ம் இடம் பிடித்துள்ளார் ஆஸி. கேப்டன்...

News image
Updated On :5 ஜனவரி 2018, 11:17 am

எழில்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக ஆறாயிரம் டெஸ்ட் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் சோபர்ஸுடன் இணைந்து 2-ம் இடம் பிடித்துள்ளார் ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 5-வது டெஸ்டில் இன்றைய ஆட்டத்தில் 44 ரன்களுடன் களத்தில் உள்ளார் ஸ்மித். இந்நிலையில் 26-வது ரன்னில் ஆறாயிரம் டெஸ்ட் ரன்களைக் கடந்தார். 61 டெஸ்டுகள், 111 இன்னிங்ஸ்களில் இந்த ரன்களை எட்டியுள்ளார். இத்துடன் அதிவேக ஆறாயிரம் ரன்கள் பட்டியலில் சோபர்ஸுடன் இணைந்துள்ளார் ஸ்மித். முதல் இடத்தில் டான் பிராட்மேன் உள்ளார். அவர் 45 டெஸ்டுகளில் 68 இன்னிங்ஸிலேயே ஆறாயிரம் ரன்களை எட்டியுள்ளார். 

அதிவேக 6000 டெஸ்ட் ரன்கள்

68 இன்னிங்ஸ் - டான் பிராட்மேன்
111 இன்னிங்ஸ் - கேரி சோபர்ஸ் / ஸ்மித் 
114 இன்னிங்ஸ் - வால்டர் ஹாமண்ட்

(இந்தியாவின் விராட் கோலி 63 டெஸ்டுகளில் 106 இன்னிங்ஸில் 5268 ரன்கள் எடுத்துள்ளார்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.