திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பிபிஎல்: லீக் சுற்றுடன் வெளியேறியது சென்னை

பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.

News image
Updated On :8 ஜனவரி 2018, 7:54 pm

க.தி.மணிகண்டன்

பிரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் சென்னை ஸ்மாஷர்ஸ் அணி 3-2 என்ற கணக்கில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
3-ஆவது பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டி கடந்த மாதம் 23–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சுற்று லீக் ஆட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதில் சனிக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மாஷர்ஸ் அணி, ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ûஸ வீழ்த்தியது.
எஞ்சியிருந்த தனது கடைசி ஆட்டத்தில் பெங்களூரு அணியை திங்கள்கிழமை எதிர்கொண்டது சென்னை. முதலில் ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது. இதில், சென்னையின் சுமித் ரெட்டி- யாங் லீ இணை, பெங்களூரின் மதியாஸ் போ-கே.கிம் சா ரங் இணையை எதிர்கொண்டது. முதல் செட்டை 8-15 என்ற கணக்கில் சென்னை இணை பறிகொடுத்தது. எனினும், இரண்டாவது செட்டை 15-14 என்ற கணக்கில் கைப்பற்றிய சென்னை, வெற்றியைத் தீர்மானிக்கும் மூன்றாவது செட்டையும் 15-13 என்ற கணக்கில் போராடி வென்றது.
சிந்து வெற்றி: மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சென்னை வீராங்கனை சிந்து, 15-9, 15-14 என்ற நேர் செட் கணக்கில், பெங்களூரின் கிறிஸ்டி கில்மோரை வீழ்த்தினார். ஆடுகளத்தில் சிந்து களம் இறங்கியதும் ரசிகர்கள் ஆர்பரிக்கத் தொடங்கினர். முதல் செட்டை 15-9 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார் சிந்து.
இரண்டாவது செட்டை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் கில்மோர் விளையாட, சிந்துவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முடிவில் 15-14 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி சிந்து வெற்றி பெற்றார்.
அக்ஸல்சென் அபாரம்: ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூரின் விக்டர் அக்ஸல்சென், 15-11, 6-15, 15-9 என்ற செட் கணக்கில் சென்னை வீரர் டி.சேன்சோம்பூன்சக்கை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் அக்ஸல்சென் முதல் செட்டை 15-11 என்ற கணக்கில் கைப்பற்றினார். எனினும், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15-6 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை மீண்டார் சேன்சோம்பூன்சக். இருப்பினும், கடைசி செட்டை தனது சாதுரியமான ஆட்டத்தால் 15-9 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி பெற்றார் அக்ஸல்சென்.
மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூரின் சுபாங்கர் டே, 15-12, 15-12 என்ற நேர் செட் கணக்கில் சென்னையின் பிரைஸ் லேவர்டெûஸ வீழ்த்தினார்.
கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சென்னையின் சிந்து-கிறிஸ் ஆட்காக் ஜோடி,14-15, 11-15 என்ற செட் கணக்கில் பெங்களூரின் சிக்கி ரெட்டி-கிம் சா ரங் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. இரண்டு டிரம்ப் ஆட்டங்களில் வெற்றதன் அடிப்படையில் கூடுதல் புள்ளிகளைப் பெற்று 3-2 என்ற கணக்கில் சென்னை வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்துக்கு சென்னை அணி முன்னேறியுள்ளது. எனினும், அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது.
இதனிடையே, தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, நடிகர் சூர்யா, ஜோதிகா, நடிகர் பரத் உள்ளிட்டோர் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்தைக் காண வந்திருந்தனர். சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் 18-ஆவது ஆட்டத்தில் மும்பை ராக்கெட்ஸ்-ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.