இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகள் ஸீவா, ரசிகர்களின் தேவதையாகத் திகழ்கிறார்.
அவர் செய்யும் ஒவ்வொரு குறும்புச் செயல்களையும் அவரது தாயார் சாக்ஷி மற்றும் தந்தை தோனி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
ஸீவாவுக்கென இன்ஸ்டாகிராம் பக்கம் உருவாக்கப்பட்டது. அதில் அவருடைய குறும்புகள் அடங்கிய புகைப்படங்கள், விடியோக்கள் என அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஸீவா பாடிய மலையாளப் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஸீவா படிக்கும் பள்ளியில் சமீபத்தில் ஆண்டு விழா நடைபெற்றது. மகளின் முதலாவது பள்ளி ஆண்டு விழாவை அடுத்து தந்தை தோனி, நேரில் சென்று அங்குள்ள அனைத்து குழந்தைகளுடனும் உற்சாகக் குரல் எழுப்பி அவர்களுடன் குதூகலித்தார்.
தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் தோனிக்கு நிறைய ஓய்வு நேரம் கிடைப்பதால் அதை இவ்வாறு பயன்படுத்தி வருகிறார்.
அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் 11-ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


