இந்திய, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் சனிக்கிழமை தொடங்கி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 113.5 ஓவர்களில் 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மர்கராம் 94, ஆம்லா 82 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 92.1 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி 153 ரன்கள் குவித்தார். இது அவருடைய 21-வது டெஸ்ட் சதமாகும். தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. டிவில்லியர்ஸ் 50, எல்கர் 36 ரன்களுடன் களத்தில் உள்ளனர். பும்ரா 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை விட 118 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. மழை மற்றும் போதிய வெளிச்சமின்மை காரணமாக 3-ஆம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


