ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

2-வது டெஸ்ட்: இந்திய அணி திணறல்!

புஜாராவின் விக்கெட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. ..

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:00 pm

எழில்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடி வரும் இந்திய அணி தோல்வியை எதிர்நோக்கியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்துடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 23 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. பார்திவ் (5 ரன்கள்), புஜாரா (11 ரன்கள்) களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இந்திய அணி புஜாரா மீது மிகுந்த நம்பிக்கை வைத்த நிலையில் முதல் இன்னிங்ஸைப் போல இரண்டாவது இன்னிங்ஸிலும் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியளித்துள்ளார் புஜாரா. 

Story image

இதன் மூலம் புஜாரா சில விநோத சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதுவரை எந்தவொரு இந்திய பேட்ஸ்மேனும் ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனதில்லை. இதன் அடிப்படையில் இருமுறை ரன் அவுட் ஆன முதல் இந்திய பேட்ஸ்மேன் என்கிற விநோத சாதனைக்கு உள்ளாகியுள்ளார் புஜாரா. 

ஒரு டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆன பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கை - 23. கடந்த 17 வருடங்களில் இப்போதுதான் மீண்டும் நடைபெற்றுள்ளது. கடைசியாக 2000-ம் ஆண்டு டிசம்பரில் ஸ்டீபன் பிளமிங் இதுபோல ஒரே டெஸ்டில் இருமுறை ரன் அவுட் ஆனார். 

புஜாராவின் விக்கெட்டுக்குப் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. பார்தீவ் படேல் மார்கலின் அற்புதமான கேட்ச்சால் 19 ரன்களில் வெளியேறினார். பாண்டியா 6 ரன்களில் நடையைக் கட்டினார். முதல் இன்னிங்ஸில் நன்கு விளையாடிய அஸ்வின் 3 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். எல்.கிடி அற்புதமான பந்துவீச்சால் இதுவரை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்திய அணி 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. இன்னும் 3 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு 166 ரன்கள் தேவைப்படுகிறது. இதனால் 2-வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.