ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

டி20: 105 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் சோகக்கதை டி20 போட்டியிலும் தொடர்கிறது...

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:03 pm

எழில்

பாகிஸ்தானின் சோகக்கதை டி20 போட்டியிலும் தொடர்கிறது. முதல் டி20 போட்டியில் 105 ரன்களுக்குச் சுருண்டுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஒருநாள் போட்டியில் படுதோல்வி கண்ட பாகிஸ்தான் அணி, டி20யிலாவது அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது. 38 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, கடைசியில் 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

அதிகபட்சமாக, பாபர் அஸாம் 41 ரன்களும் ஹசன் அலி 23 ரன்களும் எடுத்தார்கள். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்கள். நியூஸிலாந்தின் ரான்ஸ், செளதி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.