

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான யு-19 காலிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் அற்புதமான பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. மெக்வேடு 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானின் முகமது முசா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிதான இந்த இலக்கை ஓரளவு சிரமத்துடன் 47.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்து பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அலி ஜர்யப் ஆசிப் 74 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உத்வினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.