/

ஆஸ்திரேலியன் ஓபன்: ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு...

News image
Updated On :24 ஜனவரி 2018, 11:17 am

எழில்

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீரருமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சும் மோதினார்கள். இதில், 7-6(1) 6-3 6-4 என நேர் செட்களில் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ஃபெடரர். 

Story image

அரையிறுதியில் தென் கொரியாவின் ஹியோன் சங்கை எதிர்கொள்கிறார் ஃபெடரர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.