ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆடுகள சர்ச்சை: 3-ஆம் நாள் ஆட்டம் முன்கூட்டியே நிறுத்தம்

3-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம் ஆடுகள சர்ச்சை, மழை காரணமாக முன்னதாக நிறுத்தப்பட்டது.

News image
Updated On :27 ஜனவரி 2018, 10:22 am

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 54 ரன்களும், புஜாரா 50 ரன்களும், புவனேஸ்வர் குமார் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளும், மோர்கல், பிலாண்டர், பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நிகிடி 1 விக்கெட் எடுத்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆம்லா 61, பிலாண்டர் 35, நிகிடி 30 ரன்கள் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 7 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்திய தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 247 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முரளி விஜய் 25, விராட் கோலி 41, ரஹானே 48, புவனேஸ்வர் குமார் 33, முகமது ஷமி 27 ரன்கள் சேர்த்தனர்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், மோர்கல், ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இப்போட்டியில் வெற்றிபெற தென் ஆப்பிரிக்க அணிக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்க வீரர் மர்கராம் 4 ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் பார்த்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதற்கிடையில் ஆடுகளத்தின் தன்மை தொடர்பான சர்ச்சை எழுந்தது.

இது ஆடுவதற்கு தகுதியில்லை என காரணம் காட்டி போட்டி நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இரு அணி கேப்டன்களும் நடுவர்களுடன் கலந்து பேசினர். இதற்கிடையில் மழையும் குறுக்கிட்டதால் ஆட்டம் முன்னதாகவே நிறுத்தப்பட்டது. 

அப்போது தென் ஆப்பிரிக்க அணி 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்தது. எல்கர் 11, ஆம்லா 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்னும் 2 நாள் ஆட்டம் மீதமிருக்கையில் தென் ஆப்பிரிக்கா வெற்றிபெற 224 ரன்கள் தேவை. கைவசம் 9 விக்கெட்டுகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.