மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! ராகவ் சத்தா உள்பட ஆம் ஆத்மியின் 7 எம்பிக்கள் பாஜகவில் இணைகின்றனர்!தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஆய்வாளராக கம்பீர் பணியாற்றுவார்: தில்லி கிரிக்கெட் சங்க தலைவர்

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆய்வாளராக கௌதம் கம்பீர் பணியாற்றுவார் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ரஜத் ஷர்மா தெரிவித்துள்ளார்.

News image
Updated On :4 ஜூலை 2018, 1:05 pm

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆய்வாளராக கௌதம் கம்பீர் பணியாற்றுவார் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ரஜத் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தில்லி கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக ரஜத் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 27 முதல் 30 வரை தில்லி கிரிக்கெட் சங்க தேர்தல் நடைபெற்றது. பின்னர் 2-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் முன்னாள் வீரர் மதன் லால்-ஐ விட 517 வாக்குகள் கூடப் பெற்று ரஜத் ஷர்மா, புதிய தலைவராக தேர்வானார். தில்லி கிரிக்கெட் சங்கத்தின் புதிய துணைத் தலைராக 48.87 சதவீத வாக்குகள் பெற்று ராகேஷ் குமார் பன்சால், தேர்வுசெய்யப்பட்டார். இவர் பிசிசிஐ-யின் தற்போதைய தற்காலிக தலைவரான சி.கே.கண்ணா மனைவி சசியை விட 278 வாக்குகள் கூடப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ரஜத் ஷர்மா கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், தில்லி கிரிக்கெட் சங்கத்தின் பிரதிநிதியாக உள்ளார். எனவே அவரை இச்சங்கத்தின் ஆய்வாளராக நியமித்துள்ளேன். எனவே இனிவரும் காலங்களில் தில்லி கிரிக்கெட் சங்கம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆய்வ செய்வார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.