சச்சினும் ரோஜர் ஃபெடரரும் உரையாடியதைக் காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு நேற்று கிடைத்தது.
விம்பிள்டனில் தற்போது விளையாடி வரும் ஃபெடரர், ஓர் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்துவது போல ஒரு ஷாட்டை ஆடினார். இதையடுத்து இந்த விடியோவைக் கண்ட சச்சின், ஃபெடரருக்கு ட்வீட் செய்தார்.
எப்போதும்போல கைகளும் கண்களும் ஒருங்கிணைந்து அற்புதமாக விளையாடியுள்ளார். ஃபெடரர், நீங்கள் 9-வது விம்பிள்டன் பட்டத்தை வென்றபிறகு நாம் இருவரும் கிரிக்கெட், டென்னிஸ் குறித்து அவரவர் குறிப்புகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்றார்.
ஆனால், அதுவரைக்கும் எல்லாம் ஃபெடரர் பொறுமையாக இருக்கவில்லை. உடனடியாகப் பதிலளித்தார்.
அதுவரை ஏன் பொறுமையாக இருக்க வேண்டும். நான் குறிப்புகள் எடுத்துக்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.
இவர்கள் உரையாடலில் கலந்துகொண்ட ஐசிசி, ஃபெடரரை நெ.1 டெஸ்ட் வீரராக எண்ணி கற்பனையாகப் படம் வெளியிட்டது. சச்சின் - ஃபெடரர் இடையிலான உரையாடல் வரும் நாள்களில் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

மேற்கு வங்கத்தில் 4,660 துணை வாக்குச்சாவடிகளுக்கு ஒப்புதல்!

திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஸ் வேட்புமனு தாக்கல்!

ஐபிஎல் 2026: 2ஆவது முறையாக பஞ்சாப் கேப்டனுக்கு அபராதம்..! இந்தமுறை ரூ. 24 லட்சம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


