/

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக சஸ்பெண்ட்

முறைதவறி நடந்த புகார் எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக விசாரணை முடியும் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் 

News image
Updated On :24 ஜூலை 2018, 12:48 am IST

முறைதவறி நடந்த புகார் எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக விசாரணை முடியும் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அணியின் தொடக்க வீரரான குணதிலக (27) முறைதவறி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அது எந்த வகையான குற்றச்சாட்டு என தெரியாத நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் ஆட்டத்துக்கு பின் அவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வரும் நிலையில் குணதிலக மீது புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.