ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

ஆடும் லெவன் அறிவித்த இங்கிலாந்து: வியூகம் குறித்து ஜோ ரூட் விளக்கம்

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :31 ஜூலை 2018, 2:47 pm

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இதில் ஆகஸ்டு 1-ஆம் தேதி தொடங்கி பார்மிங்காமில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ள சுழற்பந்துவீச்சாளர் ஆதில் ரஷித் இடம்பிடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக பந்துவீசியதன் எதிரொலியாக அவர் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். ஏனெனில் அவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதுபோல ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்திறனுடன் விளங்கி வரும் ஜாஸ் பட்லர் புதிய துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவுடனான டெஸ்ட் தொடர் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இந்திய அணியில் உள்ள வலதுகை பேட்ஸ்மேன்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு ஆதில் ரஷித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சமீபகால ஆட்டங்களில் அவர் சிறப்பாக செயல்பட்டு நம்பிக்கையுடன் உள்ளார். ஆதில் ரஷிதை எனக்கு நீண்ட காலமாக தெரியும். அவ்வகையில் அவர் கடந்த 2 ஆண்டுகளில் கிரிக்கெட் வீரராக முழுமைப் பெற்றுள்ளார் என்று கருதுகிறேன். அவரது செயல்பாடுகள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளார்.

அதுபோல ஒருநாள் தொடர்களில் துணைக் கேப்டனாக செயல்பட்ட ஜாஸ் பட்லர், இங்கிலாந்து அணியில் போற்றுதலுக்குரிய வீரர். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை அவர் அதிகம் நேசிப்பவர். மேலும் இங்கிலாந்து அணிக்கு நீண்டகால அடிப்படையில் துணைக் கேப்டனை தேர்வு செய்ய நினைத்தோம். எனவே அதற்கு ஜாஸ் பட்லர் சரியான தேர்வாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன்:

ஆலஸ்டைர் கூக், கீட்டன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கர்ரன், ஆதில் ரஷித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.