முகத்தை மூடும் உடையை அணிய வேண்டும் என்கிற ஈரான் அரசின் நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிய செஸ் போட்டியிலிருந்து விலகியுள்ளார் கிராண்ட் மாஸ்டர் செளம்யா சுவாமிநாதன்.
ஆசிய செஸ் போட்டி, ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை ஈரானில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி சார்பாக செளம்யா சுவாமிநாதனும் பங்குபெறுவதாக இருந்த நிலையில் திடீரென அவர் விலகியுள்ளார். இதுகுறித்த விளக்கத்தை ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
முகத்தை மூடும் உடையையோ பர்தாவையோ அணிய எனக்கு விருப்பமில்லை. ஈரானின் விதிமுறைகள் என்னுடைய தனி மனித உரிமையில் தலையிடுவதாக எண்ணுகிறேன். இதுபோன்ற போட்டிகளில் இந்திய அணியின் உடையை அணியச் சொல்வதன் காரணத்தைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் விளையாட்டில் மத ரீதியிலான உடைக்கு இடம் கிடையாது.
வீரர்களின் உரிமைகளுக்கும் நலனுக்கும் குறைந்தளவில் முக்கியத்துவம் அளிப்பது வருத்தத்தை அளிக்கிறது. என் உரிமையை நிலைநாட்ட ஒரே வழி, நான் ஈரானுக்குச் செல்லாமல் இருப்பதுதான். வங்கதேசத்தில் இந்தப் போட்டி முதலில் நடைபெறுவதாக இருந்தது. அதனால் தான் பங்குபெற ஒப்புக் கொண்டேன். ஆனால் ஈரானுக்கு மாற்றப்பட்டுள்ளதால் விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. என்று தன் நிலையை அவர் விளக்கியுள்ளார்.

2016-ல் ஈரானில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றபோது இதே காரணங்களை முன்வைத்து இந்திய வீராங்கனை ஹீனா சித்து விலகினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளழகா் கோயில் கழிவுநீா் முறையாக சுத்திகரிக்கப்படுமா?

ஒட்டன்சத்திரம் அருகே அருவியில் குளிக்கச் சென்ற 4 இளைஞா்கள் மாயம்

திமுக அரசின் திட்டங்களால் அதிகளவில் பயனடைபவா்கள் ஹிந்துக்களே: கனிமொழி எம்.பி.

மேன்சன் குத்து பாடல்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


