ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

இங்கிலாந்தில் கலக்கும் சிஎஸ்கே வீரர் தீபக் சஹார்! 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!

அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில்  5 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்...

News image
Updated On :26 ஜூன் 2018, 12:07 pm IST

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய ஏ அணி முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்திய ஏ அணி தோல்வியடைந்தது. இந்நிலையில் நேற்று லீசெஸ்டரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மே.இ அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அந்த அணி 49.1 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விக்கெட் கீப்பர் தாமஸ் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தீபக் சஹார், 10 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தமிழகத்தின் விஜய் சங்கர் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். 

இந்த இலக்கை இந்திய ஏ அணி எளிதாக எதிர்கொண்டது. அந்த அணி 38.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய ஏ தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 112 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் அரை சதமெடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில்  5 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார் சஹார். மேலும் இந்தச் சுற்றுப்பயணத்தில் சஹார் 4 ஆட்டங்கள் விளையாடி 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். மேலும் இந்தச் சுற்றுப்பயணத்தில் சஹார் 4 ஆட்டங்கள் விளையாடி 11 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் அகர்வால் 135 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.