உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் எச் பிரிவில் வியாழக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் செனகல் அணியைத் தோற்கடித்த கொலம்பியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் போலந்து அணியிடம் தோல்வியடைந்தாலும் ஜப்பான் அணியும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது.
வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்தில் செனகல் அணிக்கு எதிரான போட்டியில் கொலம்பியா களமிறங்கியது. அதே நேரத்தில் போட்டியை டிரா செய்தால் போதுமானது என்ற நிலையில் செனகல் இருந்தது. அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை நிர்ணயிக்கும் முக்கியமான ஆட்டம் என்பதால் இரு அணி வீரர்களுமே தொடக்கத்தில் இருந்தே ஆவேசத்துடன் விளையாடினர். தாக்குதல் ஆட்டத்திலும், தடுப்பு ஆட்டத்திலும் இரு அணிகளும் சமபலத்துடன் இருந்ததால் முதல் பாதியில் கோல் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் இரண்டாவது பாதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த கொலம்பியா அணி ரசிகர்கள் தங்கள் அணி வீரர்களை உற்சாகப்படுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆட்டத்தின் 74 ஆவது நிமிடத்தில் கொலம்பியா அணியின் மியா கோல் அடித்து, அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதையடுத்து, செனகல் அணி வீரர்கள் பதில் கோல் அடித்து ஆட்டத்தை எப்படியாவது டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடினர்.
எனினும், அந்த அணியின் பல முயற்சிகளை கொலம்பியா கோல் கீப்பர் தடுத்தார். துல்லியம் குறைவான ஷாட்களால் செனகல் வீரர்கள் பல வாய்ப்புகளை இழந்தனர். இதனால் இறுதி வரை அவர்களால் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியா வென்றது. இதன் மூலம் 2 வெற்றி ஒரு தோல்வியுடன் எச் பிரிவில் முதலிடம் பிடித்து அந்த அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
ஜப்பானின் நேர்மைக்கு வெற்றி...

எச் பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் போலந்து அணியிடம் ஒரு கோல் வாங்கி ஜப்பான் தோல்வியடைந்தது. போலந்து அணி ஏற்கெனவே 2 போட்டிகளில் தோற்றதால் போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது. இதனால் இந்த வெற்றி அந்த அணிக்கு ஆறுதலாகவே அமைந்தது.
ஜப்பான் இந்த போட்டியில் தோல்வியடைந்ததால் எச் பிரிவில் ஜப்பான், செனகல் இரு அணிகளுமே தலா 4 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தன.
இதையடுத்து எந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்பது அவர்களின் ஃபேர் பிளே' புள்ளிகள் (ஆட்டத்தை நேர்மையாக விளையாடுவதற்காக வழங்கப்படும் புள்ளிகள்) மூலம் முடிவு செய்யப்பட்டது.
இதில் ஐப்பான் அணி மைனஸ் 4 புள்ளிகளும், செனகல் மைனஸ் 6 புள்ளிகளும் பெற்றிருந்தன. இதன் அடிப்படையில் ஜப்பான் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாம்

பெண் எம்.பி.க்கள் குறித்து அநாகரிக பேச்சு: மக்களவையில் திரிணமூல் எம்.பி. இடைநீக்கம் - மூன்றாவது நாளாக அமளி
ஆத்தூா் அருகே மின் இணைப்பு வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம்: உதவிப் பொறியாளா், கம்பியாளா் கைது







