மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாங்கள் தோற்றால் இந்தியாவில் மகிழ்கிறார்கள்: ரவி சாஸ்திரி ஆவேசம்

இதுதான் நம் விமரிசகர்களிடம் உள்ள பெரிய பிரச்னை. இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை ஜெயித்தால்...

News image
Updated On :1 மார்ச் 2018, 12:33 pm

எழில்

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரைத் தென் ஆப்பிரிக்க அணி வெல்ல, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை இந்தியா வென்றது.

இந்திய அணி மீதான விமரிசனங்கள் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒரு பேட்டியில் கூறியதாவது:

இரண்டு டெஸ்டுகளில் தோற்றபிறகும் எங்களால் மூன்றாவது டெஸ்டை வெல்ல முடியும் என்று நம்பினோம். முதலிரண்டு டெஸ்டுகளையும் கூட நாங்கள் வென்றிருக்க முடியும். இதை சிலரே அறிந்திருந்தார்கள். சிலசமயங்களில் நம் நாட்டில், இந்திய அணி தோற்கும்போது மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். முதலிரண்டு டெஸ்டுகளிலும் இரண்டு செஸன்களில் மட்டுமே நாங்கள் பின்தங்கியிருந்தோம். அதனால்தான் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. இக்குறைகளை அறிந்துகொண்டபிறகு அடுத்த டெஸ்டை டிரா செய்யக்கூடாது, ஜெயிக்கவேண்டும் என்று எண்ணினோம். ஜோகன்னஸ்பர்க் டெஸ்டில் எத்தனை அணிகள் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்திருக்கும்?

நாங்கள் நன்றாக விளையாடும்போது எதிரணி பலவீனமாக உள்ளதாக விமரிசகர்கள் கூறுகிறார்கள். இதுதான் நம் விமரிசகர்களிடம் உள்ள பெரிய பிரச்னை. இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளை ஜெயித்தால் அந்த அணிகள் பலமாக இல்லை என்கிறார்கள். ஆனால் இந்திய அணி தோற்கும்போது நம் அணி பலவீனமாக இருந்தது என்று கூறுவதில்லை. நாங்கள் வீரர்களுக்கு எதிராக விளையாடுவதில்லை. ஒரு நாட்டுக்கு எதிராகவே விளையாடுகிறோம். நாங்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும்போது அந்த அணியில் யார் யார் உள்ளார்கள் என்பது பற்றி கவலையில்லை. 

எதிர்பார்ப்புகளுக்கு வீரர்கள் எவ்வாறு ஈடுகொடுக்கிறார்கள் என்றால், எதையும் படிக்க வேண்டாம், எதையும் கேட்க வேண்டாம், தொடர்ந்து பயிற்சி எடுத்துக்கொண்டால், மற்றவை தானாக பின்தொடரும் என அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். வெற்றியும் தோல்வியும் நம் கையில் கிடையாது, ஆனால் அதற்கான முயற்சிகள் நம்மிடம்தான் உள்ளன என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.