விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை
/

கதவைத் தட்டக் கூடாது; திறக்க வைக்க வேண்டும்: மயங்க் அகர்வால் குறித்து ஹர்ஷா போக்ளே!

தேசிய அணியில் இடம்பிடிக்க அதன் கதவைத் தட்ட வேண்டாம். உங்களுடைய பங்களிப்பினால் அதைத் திறக்க வைக்க...

News image
Updated On :1 மார்ச் 2018, 12:31 pm

எழில்

இந்த வருட விஜய் ஹஸாரே போட்டியில் மயங்க் அகர்வால் எடுத்த ரன்கள்.

77, 109, 84, 28, 102, 89, 140, 81, 90.

41 ரன்கள் வித்தியாசத்தில் இறுதி ஆட்டத்தை வென்ற கர்நாடக அணி, விஜய் ஹஸாரே கோப்பையை வென்றுள்ளது. இறுதி ஆட்டத்தில் 90 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வால் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

மயங்க் அகர்வால் குறித்து கிரிக்கெட் நிபுணர் ஹர்ஷா போக்ளே ட்விட்டரில் கூறியதாவது: தேசிய அணியில் இடம்பிடிக்க அதன் கதவைத் தட்ட வேண்டாம். உங்களுடைய பங்களிப்பினால் அதைத் திறக்க வைக்க வேண்டும். மயங்க் அகர்வால் அதைத்தான் செய்துள்ளார் என்று புகழ்ந்துள்ளார்.

எனினும் முத்தரப்பு டி20 தொடரில் மயங்க் அகர்வால் தேர்வாகவில்லை. இதைப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள். எனினும் இந்திய பேட்ஸ்மேன்கள் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மயங்க் அகர்வால் தேர்வாக வாய்ப்புண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.