முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி! ஆட்ட நாயகன் - ஸ்டார்க்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது...


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
417 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி, தனது 2-வது இன்னிங்ஸில் 298 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
4-ம் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. அந்த அணி வெற்றி பெற 124 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு விக்கெட்டே கைவசம் இருந்தது. இந்நிலையில் இன்று 22 பந்துகள் விளையாடி தனது கடைசி விக்கெட்டை இழந்து தோல்வியடைந்தது. ஹேஸில்வுட் பந்தில் 83 ரன்களில் ஆட்டமிழந்தார் குயிண்டன் டி காக்.
டர்பன் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 110.4 ஓவர்களில் 351 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அணியில் மிட்செல் மார்ஷ் மட்டும் 96 ரன்கள் விளாசியிருந்தார். தென் ஆப்பிரிக்க தரப்பில் கேசவ் மஹராஜ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார். பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 51.4 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது. டி வில்லியர்ஸ் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 189 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கி 74.4 ஓவர்களில் 227 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பேன்கிராஃப்ட் அதிகபட்சமாக 53 ரன்கள் அடித்தார். தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் 4 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 417 என்ற வெற்றி இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் மார்க்ரம் அதிகபட்சமாக 19 பவுண்டரிகள் உள்பட 143 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டி காக் 83 ரன்கள் எடுத்தார். இந்த டெஸ்டில் 9 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டார்க், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
வெள்ளியன்று 2-வது டெஸ்ட் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...