பெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

ராஸ் டெய்லர் 181 ரன்கள்! கடினமான இலக்கை விரட்டி இங்கிலாந்தை வீழ்த்திய நியூஸிலாந்து!

அவருடைய ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள், கொடுத்து வைத்தவர்கள்...

News image
Updated On :7 மார்ச் 2018, 6:58 am

எழில்

இது ஒரு மகத்தான ஒருநாள் ஆட்டம்.

முதலில் விளையாடிய இங்கிலாந்து 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் எடுத்தது. இந்தக் கடினமான இலக்கை கடைசி ஓவரில் எட்டியது நியூஸிலாந்து. ராஸ் டெய்லர் 181 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் மகத்தான வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவருடைய ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள், கொடுத்து வைத்தவர்கள்.

டுனேடினில் நடைபெற்ற 4-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அது தவறான முடிவோ என்று எண்ணுமளவுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வெளுத்து வாங்கினார்கள். பேர்ஸ்டோவும் ரூட்டும் சதமடித்து அசத்தினார்கள். பேர்ஸ்டோவ் 7 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 138 ரன்களிலும் ரூட் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 102 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்தின் சோதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story image

கடினமான இலக்கை ஆரம்பத்தில் மிக மோசமாக எதிர்கொண்டது நியூஸிலாந்து. தொடக்க வீரர்களான கப்தில், மன்ரோ ஆகிய இருவரும் டக் அவுட் ஆகி நியூஸி. ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்கள். ஆனாலும் பதறாமல் அதன்பிறகு களமிறங்கிய வீரர்கள் பக்குவத்துடன் இலக்கை விரட்டினார்கள். வில்லியம்சன் 45 ரன்களும் லதம் 71 ரன்களும் எடுத்து மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். நான்காவதாகக் களமிறங்கிய ராஸ் டெய்லர் அதகளம் செய்தார். தொடர்ந்து பவுண்டரிகளாக அடித்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தினார். 98 பந்துகளில் சதமடித்த டெய்லர் அதன்பிறகும் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டம் நியூஸிலாந்து பக்கம் திரும்பியது. அடுத்த 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசிக்கட்டத்தில் விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொண்டார். 

Story image

டெய்லரின் உறுதுணையால் நியூஸிலாந்து அணி 49.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்து அட்டகாசமான வெற்றியை அடைந்தது. டெய்லர் 181 ரன்கள், நிகோலஸ் 13 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்திய டெய்லர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை அடைந்துள்ளன. கடைசி ஒருநாள் ஆட்டம் சனிக்கிழமையன்று கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.