3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

பத்ரிநாத்துக்குப் பதிலாக கோலியைத் தேர்வு செய்ததால் பதவியை இழந்தேன்: வெங்சர்கார் புதிய தகவல்!

பத்ரிநாத்துக்குப் பதிலாக விராட் கோலியை இந்திய அணியில் சேர்த்ததால் என். சீனிவாசனின் கோபத்துக்கு ஆளாகி...

News image
Updated On :8 மார்ச் 2018, 9:55 am

எழில்

பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கதையை தற்போது கூறியிருக்கிறார் வெங்சர்க்கார். தமிழக வீரர் பத்ரிநாத்துக்குப் பதிலாக விராட் கோலியை இந்திய அணியில் சேர்த்ததால் என். சீனிவாசனின் கோபத்துக்கு ஆளாகி தேர்வுக்குழுத் தலைவர் பதவியை இழந்ததாக புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த விவகாரம் குறித்து வெங்சர்கார் கூறியதாவது: இந்திய இளம் வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்தார்கள். U-23 வீரர்களை மட்டும் அணியில் சேர்த்தோம். அந்த வருடம் U-19 உலகக் கோப்பையை கோலி தலைமையிலான இந்திய அணி வென்றது. எனவே அணியில் கோலியைச் சேர்த்தோம். ஆட்டங்களைப் பார்க்க தேர்வுக்குழுத் தலைவராக இருந்த நான் பிரிஸ்பேன் சென்றேன். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் கோலி தொடக்க வீரராகக் களமிறங்கினார். எதிரணியில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிய வீரர்கள் சிலர் இருந்தார்கள். இந்திய அணியில் ஒருவரும் இல்லை. கோலி 123* ரன்கள் எடுத்தார். அப்போது தான் கோலி இந்திய அணியில் விளையாட வேண்டும் என எண்ணினேன். 

தேர்வுக்குழு உறுப்பினர்கள் என் கருத்தை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் தோனியும் கேரி கிரிஸ்டனும் தயங்கினார்கள். அவர்கள் கோலியின் ஆட்டத்தை அவ்வளவாகப் பார்த்ததில்லை. நான் கோலியின் ஆட்டத்தைப் பார்த்துள்ளேன். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தினேன். பத்ரிநாத் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் என்பதால் அவரை அணியில் சேர்க்க அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள் என்பதை நான் அறிவேன். கோலியை இந்திய அணியில் சேர்க்கவேண்டுமென்றால் பத்ரிநாத்தை நீக்கவேண்டும் என்பதால்.

என். சீனிவாசன் பிசிசிஐயின் பொருளாளராக அப்போது இருந்தார். தமிழக அணியைச் சேர்ந்தவர் என்பதால் பத்ரிநாத்தை அணியிலிருந்து நீக்கியது குறித்து வருத்தமடைந்தார்.

Story image

எதன் அடிப்படையில் பத்ரிநாத் நீக்கப்பட்டார் என்று என்னிடம் கேட்டார். ஆஸ்திரேலியாவில் கோலி விளையாடியதைப் பார்த்தேன். மிகத்திறமையான வீரர். இந்திய அணியில் அவர் கட்டாயம் விளையாட வேண்டும் என்றேன். ஆனால், பத்ரிநாத் தமிழக அணிக்காக அந்த சீசனில் 800 ரன்கள் எடுத்துள்ளார் என சீனிவாசன் என்னிடம் விவாதித்தார். பத்ரிநாத்துக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அவரிடம் சொன்னேன்.

எப்போது கிடைக்கும். இப்போதே பத்ரிநாத்துக்கு 29 வயது ஆகிவிட்டது என்றார். அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் அப்போது என்று என்னால் கூறமுடியாது என்றேன். அடுத்தநாளே, பிசிசிஐ தலைவராக அப்போது இருந்த சரத் பவாரிடம் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்றார் என். சீனிவாசன். அத்துடன் என்னுடைய பதவிக்காலம் முடிவுக்கு வந்தது என்று கூறியுள்ளார். 

2006-ல் தேர்வுக்குழுத் தலைவரான வெங்சர்க்கார், 2008-ல் பதவியை இழந்தார். அவருக்கு அடுத்ததாக ஸ்ரீகாந்த், தேர்வுக்குழுத் தலைவர் ஆனார். 

பத்ரிநாத், 2 டெஸ்டுகள், 7 ஒருநாள், 1 டி20 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.