இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 மகளிர் கிரிக்கெட் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதி ஆட்டத்துக்கு இந்திய அணி தகுதி பெறவில்லை என்றாலும் கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 107 ரன்களில் சுருண்டது.
இதையடுத்து, 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்திய அணியின் வீராங்கனைகள் அபாரமாக பந்து வீசினர்.
3.5 ஓவர்கள் வீசிய இந்தியாவின் அனுஜா பாட்டீல் 21 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக ராதா யாதவ், தீப்தி சர்மா, பூனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பூஜா வஸ்திராகர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
ஆஸ்திரேலிய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரரான டி.வியட் 22 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களம் கண்ட மிதாலி ராஜ் 6 ரன்களில் நடையைக் கட்டியபேúôதிலும், மற்றொரு இளம் வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா 41 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். கடைசி வரை அவரும், கேப்டன் ஹர்மன்பிரீத் கௌரும் (20 ரன்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஜெமிமா ரோட்ரிக் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தத் தொடரில் இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மும்பையில் சனிக்கிழமை மோதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”பழனிசாமியின் ஓனர் பாஜகதான்!” முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

ஒப்பந்தமா? தாக்குதலா? 24 மணிநேரத்தில் தெரியவரும்! ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!!

”திமுக தொடர்ந்து 2 முறை வென்றதில்லையாம்! உடைத்துக் காட்டுகிறேன்!” MK Stalin

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு புதிய தலைவர் நியமனம்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


